- ஆற்றுக்குளியலுடன் ஆசையாய் அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
- ஊர்வாசத்தின் மிச்சமாய் பயணப்பட்டன சில பூச்செடிகள் இரயிலில் என்னுடன்
- எல்லாவற்றையும் பிரிக்கையில் இலவச இணைப்பாக வெளிப்பட்டது செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி இரயில் பூச்சி ஒன்று
- பார்த்தறியாத பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் காட்ட வேண்டும் அதுவரைக்குமாவது உயிரோடிருக்க வேண்டும் அந்த பூச்சி -ஜெ.நம்பிராஜன்
Sunday, July 13, 2008
நெல்லை எக்ஸ்பிரஸ்
Saturday, July 12, 2008
முத்தத்தின் நிறைகுடம் - துளி 1
எனது முதல் கவிதைத்தொகுப்பு 'முத்தத்தின் நிறைகுடம்' நூலிலிருந்து கவிதைகள் தொடராக பாவெளியில் வெளிவரும். முதல் பகுதி இங்கே...
- உன் மேல் உதடு சூரியன்... கீழ் உதடு சந்திரன் ஒரே முத்தத்தில் உருக வைக்கும் வெயிலையும் உறைய வைக்கும் பனியையும் என் மேல் செலுத்துகிறாய்.
- நீ விவசாயி நான் விளைநிலம் என்னுள் மோகத்தை விதைத்து முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
- உன் ஒவ்வொரு முத்தமும் ஓர் முள் அதை... மறு முத்தத்தால் தான் எடுக்க வேண்டும்.
- உன் இதழ் தேனடை அதில் தேனெடுக்கும் போது மட்டுமே தேனீக்கள் கொட்டுவதில்லை.
- எத்தனை முறை குடித்தாலும் தீராத மதுப்புட்டி உன் இதழ் எவ்வளவு குடித்தாலும் ஆசை அடங்காத பெருங்குடிகாரன் நான்.
முத்தத்தின் நிறைகுடம்
ஜெ.நம்பிராஜன்
வெளியீடு: ஜெயஸ்ரீ பதிப்பகம்
Subscribe to:
Posts (Atom)