Friday, November 30, 2007

எது வெற்றி

கடைசி ஓவர்களைத் தவறாமல் பார்த்து விட
அலுவலகத்திலிருந்து அவசரப் பயணம்
சிக்னலில் ஒருபுறம்
கைக்குழந்தையுடன் பிச்சைக்காரி
மறுபுறம்
வசூல் வேட்டையில் சாலைக்காவலர்
இடதுபுறம் போகலாமென்றால்
மூத்திர வாடை அடிக்கும் முட்டுச்சந்துகளில்
டாஸ்மாக்கர்களின் சுகமான தூக்கம்
வலதுபுறமோ
தண்ணீர்க் குடங்களின் அணிவகுப்பு
நேர்ச்சாலையில்
குழிகளில் தடுக்கி விழாமல் வீடு சேர்ந்தால்
தங்கக்கோப்பை பரிசு நிச்சயம்
தட்டுத்தடுமாறி வீடு சேர்ந்ததும்
கதவு திறந்த மனைவி சொன்னாள்
"இந்தியா வின்"
-ஜெ.நம்பிராஜன்

Tuesday, November 27, 2007

சென்னபட்டணம்

வாழ வரும் அனைவரையும்
வாரி அணைக்கிறது சென்னை
நல்ல சம்பளக்காரனுக்கு
அப்பார்ட்மண்டில் வீடு
குறைந்த சம்பளக்காரனுக்கு
ஒண்டுக் குடித்தன வீடு
வேலை தேடுபவனுக்குக் கூட
மேன்சனில் குடித்தனம்
சிக்னல் அருகே வசிக்கிறான்
சென்னைத் தமிழன் மட்டும்
-ஜெ.நம்பிராஜன்

Tuesday, November 20, 2007

நந்திகிராமம்

செய்தி
'பரபரப்பான சூழ்நிலையில்
பாராளுமன்ற கூட்டத்தொடர்'
'சட்டசபையில் எதிர்க்கட்சிகள்
கூண்டோடு வெளியேற்றம்'
போன்றே அன்றாட செய்திகளில்
ஒன்றாகி விட்டன
நந்திகிராம படுகொலைகளும்.
எங்கள் கவலை
அரசி சாக கிடக்கிறாள்
அபியோ கோமாவில் இருக்கிறாள்
அஞ்சலி வேறு சிறையில் இருக்கிறாள்
எங்களுக்கு இப்படி ஆயிரம் கவலைகள்
யாருக்கய்யா நேரமிருக்கிறது
நந்திகிராமம் பற்றியெல்லாம் கவலைப்பட.
சிவப்பு கம்பளம்
சிவப்பு கொடி மாறியது
சிவப்பு கம்பளமாக
பெரு முதலாளிகளுக்கு.

Saturday, November 10, 2007

முத்தத்தின் நிறைகுடம்

நான்கு இதழ்கள் எழுதும் நவரச கவிதை முத்தம்.முத்தத்தை மையமாக வைத்து கவிதைச் சிற்பம் செதுக்கியிருக்கிறார் கவிஞர் ஜெ.நம்பிராஜன்.கவிதையை வாசிக்கும் பொழுது மனம் காதலின் உருகுநிலைக்கும் உறைநிலைக்கு சென்று திரும்புகிறது.முத்தத்தின் வாசனை உயிரின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.கவித்துவ வாசனை மனதை ஆக்கிரமிக்கிறது.சத்தமில்லாமல் யுத்தம் செய்கிறது முத்தத்தின் நிறைகுடம் எனும் இக்கவிதைத் தொகுப்பு.
-வித்தக கவிஞர் பா.விஜய்

வித்தக கவிஞர் ரசித்த சில கவிதைகள்

உன் மேல் உதடு சூரியன்...

கீழ் உதடு சந்திரன்.

ஒரே முத்தத்தில்

உருக வைக்கும் வெயிலையும்

உறைய வைக்கும் பனியையும்

என் மேல் செலுத்துகிறாய்.

நீ விவசாயி

நான் விளைநிலம்

என்னுள் மோகத்தை விதைத்து

முத்தத்தை அறுவடை செய்கிறாய்.

உன் ஒவ்வொரு முத்தமும்

ஓர் முள்

அதை...

மறு முத்தத்தால் தான்

எடுக்க வேண்டும்.

உன் இதழ் தேனடை

அதில் தேனெடுக்கும் போது மட்டுமே

தேனீக்கள் கொட்டுவதில்லை.

எத்தனை முறை குடித்தாலும்

தீராத மதுப்புட்டி

உன் இதழ்

எவ்வளவு குடித்தாலும்

ஆசை அடங்காத பெருங்குடிகாரன்

நான்.

j

மேலும் தொடர்புக்கு