கடைசி ஓவர்களைத் தவறாமல் பார்த்து விட
அலுவலகத்திலிருந்து அவசரப் பயணம்
சிக்னலில் ஒருபுறம்
கைக்குழந்தையுடன் பிச்சைக்காரி
மறுபுறம்
வசூல் வேட்டையில் சாலைக்காவலர்
இடதுபுறம் போகலாமென்றால்
மூத்திர வாடை அடிக்கும் முட்டுச்சந்துகளில்
டாஸ்மாக்கர்களின் சுகமான தூக்கம்
வலதுபுறமோ
தண்ணீர்க் குடங்களின் அணிவகுப்பு
நேர்ச்சாலையில்
குழிகளில் தடுக்கி விழாமல் வீடு சேர்ந்தால்
தங்கக்கோப்பை பரிசு நிச்சயம்
தட்டுத்தடுமாறி வீடு சேர்ந்ததும்
கதவு திறந்த மனைவி சொன்னாள்
"இந்தியா வின்" -ஜெ.நம்பிராஜன்
Friday, November 30, 2007
Tuesday, November 27, 2007
சென்னபட்டணம்
Tuesday, November 20, 2007
நந்திகிராமம்
Friday, November 16, 2007
Saturday, November 10, 2007
முத்தத்தின் நிறைகுடம்
நான்கு இதழ்கள் எழுதும் நவரச கவிதை முத்தம்.முத்தத்தை மையமாக வைத்து கவிதைச் சிற்பம் செதுக்கியிருக்கிறார் கவிஞர் ஜெ.நம்பிராஜன்.கவிதையை வாசிக்கும் பொழுது மனம் காதலின் உருகுநிலைக்கும் உறைநிலைக்கு சென்று திரும்புகிறது.முத்தத்தின் வாசனை உயிரின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.கவித்துவ வாசனை மனதை ஆக்கிரமிக்கிறது.சத்தமில்லாமல் யுத்தம் செய்கிறது முத்தத்தின் நிறைகுடம் எனும் இக்கவிதைத் தொகுப்பு.
-வித்தக கவிஞர் பா.விஜய்
வித்தக கவிஞர் ரசித்த சில கவிதைகள்
உன் மேல் உதடு சூரியன்...
கீழ் உதடு சந்திரன்.
ஒரே முத்தத்தில்
உருக வைக்கும் வெயிலையும்
உறைய வைக்கும் பனியையும்
என் மேல் செலுத்துகிறாய்.
நீ விவசாயி
நான் விளைநிலம்
என்னுள் மோகத்தை விதைத்து
முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
உன் ஒவ்வொரு முத்தமும்
ஓர் முள்
அதை...
மறு முத்தத்தால் தான்
எடுக்க வேண்டும்.
உன் இதழ் தேனடை
அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
தேனீக்கள் கொட்டுவதில்லை.
எத்தனை முறை குடித்தாலும்
தீராத மதுப்புட்டி
உன் இதழ்
எவ்வளவு குடித்தாலும்
ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
நான்.
j
மேலும் தொடர்புக்கு
Subscribe to:
Posts (Atom)