Saturday, September 20, 2008

முத்தத்தின் நிறைகுடம் - துளி 2

  • உன் ஒவ்வொரு முத்தமும்
    விருட்சத்தின் விதை
    என்னுள் விழுந்து வளர்ந்து
    ஆயிரம் முத்தங்களாய்ப் பூக்கிறது
  • உன் உதடுகளுக்கு மத்தியில்
    இறுக்கப்பட்டிருக்கிறது
    என் உயிர் மூச்சு
    உன் முத்தத்தால்
    எனக்கு உயிர் கொடு
  • காற்று வெளியில்
    எனக்கான முத்தங்கள் மிதக்கின்றன
    உன் இதழ்களில் உயிர் பெற்று
    என் இதழ்களில் இடம் பெற
  • என் ஒவ்வொரு கவிதையும்
    உன் முத்தத்தில் தொடங்கி
    முத்தத்திலேயே முடிகிறது
  • இந்த பூமியின்
    முதல் முத்தம்
    யார் கொடுத்தது
    ஆதாமா...ஏவாளா?
    -ஜெ.நம்பிராஜன்

2 comments:

Learn said...

அருமை

கார்த்திகேயன் said...

வணக்கம்...உங்களது கவிதை புதுமையும் இனிமையும் கலந்திருக்கிறது.முத்தம் வளர்ந்திருக்கிறது.அருமை... மிகவும் அருகாமையில் பார்க்க நேர்ந்தது உங்களது இதழ்களின் சூத்திரத்தை... தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்...என் வலைப்பூவுக்கு வருகை தாருங்கள். முத்தமிடக்
காத்திருக்கும் விரல்கள்...நன்றி.