Saturday, August 7, 2010

தன்னிலை உணர்தல்

• பிச்சையெடுக்கிறது...மரம் சுமக்கிறது
வித்தை காட்டுகிறது
மண்டியிடுகிறது...ஆசீர்வதிக்கிறது
பழக்க பலதும் செய்கிறது
• சிறு சங்கிலியில் பிணைக்கப்படுகிறது
தார்க்குச்சியால் குத்தப்படுகிறது
அளவுச்சாப்பாடு உருட்டித்தின்கிறது
• தன்னிலை உணர்ந்து ஓர்நாள்
விட்டு விடுதலை ஆகிறது
அடிமைப்படுத்தியவன் சொல்கிறான்,
"அதற்குப் மனநிலை பிறண்டு விட்டது"
-ஜெ.நம்பிராஜன்

Sunday, June 13, 2010

'மெக்காலே' மொழி

பூச்சாண்டி என்றால் என்னவென்றே
தெரிவதில்லை...'மெக்காலே' குழந்தைகளுக்கு
காட்சில்லாவையும் டைனோசரையும்
துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது
சோறு ஊட்ட
-ஜெ.நம்பிராஜன்

Sunday, June 6, 2010

பிள்ளைத்தமிழ்

  • படிக்கும் புத்தகத்தை
    பறித்துக்கொண்டு ஓடுகிறாய்
    புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்
    படிக்கிறேன்...நான்

  • மாறாத மழலைப்பாடல்களை
    மறந்து மறந்து பாடுகிறாய்
    மறக்காமல் மீண்டு வருகிறது
    எனது பால்யம்
    -ஜெ.நம்பிராஜன்