-வித்தக கவிஞர் பா.விஜய்
வித்தக கவிஞர் ரசித்த சில கவிதைகள்
உன் மேல் உதடு சூரியன்...
கீழ் உதடு சந்திரன்.
ஒரே முத்தத்தில்
உருக வைக்கும் வெயிலையும்
உறைய வைக்கும் பனியையும்
என் மேல் செலுத்துகிறாய்.
நீ விவசாயி
நான் விளைநிலம்
என்னுள் மோகத்தை விதைத்து
முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
உன் ஒவ்வொரு முத்தமும்
ஓர் முள்
அதை...
மறு முத்தத்தால் தான்
எடுக்க வேண்டும்.
உன் இதழ் தேனடை
அதில் தேனெடுக்கும் போது மட்டுமே
தேனீக்கள் கொட்டுவதில்லை.
எத்தனை முறை குடித்தாலும்
தீராத மதுப்புட்டி
உன் இதழ்
எவ்வளவு குடித்தாலும்
ஆசை அடங்காத பெருங்குடிகாரன்
நான்.
j
மேலும் தொடர்புக்கு
4 comments:
நம்பி இது யாருடைய உதடுகள்?
அழகான முத்தக் குறிப்புகள்,ஒவ்வொரு வரிகளிலும் காதல் ரசம் சொட்டச் சொட்ட ...
நன்றி..நண்பர்களே! தொடர்ந்து வருகை தாருங்கள்
நன்றி..நண்பர்களே! தொடர்ந்து வருகை தாருங்கள்
Post a Comment