Saturday, August 7, 2010
தன்னிலை உணர்தல்
• பிச்சையெடுக்கிறது...மரம் சுமக்கிறது வித்தை காட்டுகிறது மண்டியிடுகிறது...ஆசீர்வதிக்கிறது பழக்க பலதும் செய்கிறது
• சிறு சங்கிலியில் பிணைக்கப்படுகிறது தார்க்குச்சியால் குத்தப்படுகிறது அளவுச்சாப்பாடு உருட்டித்தின்கிறது
• தன்னிலை உணர்ந்து ஓர்நாள் விட்டு விடுதலை ஆகிறது அடிமைப்படுத்தியவன் சொல்கிறான், "அதற்குப் மனநிலை பிறண்டு விட்டது"
-ஜெ.நம்பிராஜன்
Sunday, June 13, 2010
'மெக்காலே' மொழி
Sunday, June 6, 2010
பிள்ளைத்தமிழ்
- படிக்கும் புத்தகத்தை பறித்துக்கொண்டு ஓடுகிறாய் புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப் படிக்கிறேன்...நான்
Sunday, February 8, 2009
இழவு நாடு
-
எல்லா வீடுகளையும்போன்றுவிடிவதில்லைஇழவு வீட்டின் இரவு
-
தூங்கா விழிகளுடன் இழப்பின் வலியுடன் கூடிய விடியாத இரவு அது
-
பிரிந்த நண்பர்களையும் பேசாத சொந்தங்களையும் அழைத்து வந்து விடுகிறது மிக எளிதாய்...ஒரு மரணம்
-
எல்லோரும் சேர்ந்து வழியனுப்புவர் கண்ணீருடன் இறந்தவரை
-
இவையெல்லாம் வழக்கமான மரியாதை மரிப்பவருக்கு... ஆனால்
-
வழியனுப்ப எவருமில்லை அழும் உறவுகள் எல்லாம் அகதிகளாய் எங்கோ
-
பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருக்கிறது ஒரு தேசம் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு அஞ்சி
-
நித்தம் நூறு சடலங்கள் மொத்தமாய்...கொத்துக் கொத்தாய் சாவின் குறைந்தபட்ச மரியாதையும் அற்று
-
மனிதம் மறந்த மரங்களாய் ரத்தத்தின் மிச்சங்கள் வேடிக்கை பார்க்கும் அண்டை நாட்டில் அமைதியாய் -ஜெ.நம்பிராஜன்
Saturday, September 20, 2008
முத்தத்தின் நிறைகுடம் - துளி 2
- உன் ஒவ்வொரு முத்தமும் விருட்சத்தின் விதை என்னுள் விழுந்து வளர்ந்து ஆயிரம் முத்தங்களாய்ப் பூக்கிறது
- உன் உதடுகளுக்கு மத்தியில் இறுக்கப்பட்டிருக்கிறது என் உயிர் மூச்சு உன் முத்தத்தால் எனக்கு உயிர் கொடு
- காற்று வெளியில் எனக்கான முத்தங்கள் மிதக்கின்றன உன் இதழ்களில் உயிர் பெற்று என் இதழ்களில் இடம் பெற
- என் ஒவ்வொரு கவிதையும் உன் முத்தத்தில் தொடங்கி முத்தத்திலேயே முடிகிறது
- இந்த பூமியின் முதல் முத்தம் யார் கொடுத்தது ஆதாமா...ஏவாளா? -ஜெ.நம்பிராஜன்
Sunday, August 17, 2008
ஊர் கூடி...
வாய்ப்பு
Subscribe to:
Posts (Atom)