-
எல்லா வீடுகளையும்போன்றுவிடிவதில்லைஇழவு வீட்டின் இரவு
-
தூங்கா விழிகளுடன் இழப்பின் வலியுடன் கூடிய விடியாத இரவு அது
-
பிரிந்த நண்பர்களையும் பேசாத சொந்தங்களையும் அழைத்து வந்து விடுகிறது மிக எளிதாய்...ஒரு மரணம்
-
எல்லோரும் சேர்ந்து வழியனுப்புவர் கண்ணீருடன் இறந்தவரை
-
இவையெல்லாம் வழக்கமான மரியாதை மரிப்பவருக்கு... ஆனால்
-
வழியனுப்ப எவருமில்லை அழும் உறவுகள் எல்லாம் அகதிகளாய் எங்கோ
-
பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருக்கிறது ஒரு தேசம் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு அஞ்சி
-
நித்தம் நூறு சடலங்கள் மொத்தமாய்...கொத்துக் கொத்தாய் சாவின் குறைந்தபட்ச மரியாதையும் அற்று
-
மனிதம் மறந்த மரங்களாய் ரத்தத்தின் மிச்சங்கள் வேடிக்கை பார்க்கும் அண்டை நாட்டில் அமைதியாய் -ஜெ.நம்பிராஜன்
Sunday, February 8, 2009
இழவு நாடு
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான கவிதை..
//பிரிந்த நண்பர்களையும்
பேசாத சொந்தங்களையும்
அழைத்து வந்து விடுகிறது
மிக எளிதாய்...ஒரு மரணம்//
நிஜம் !
வலிக்கு வலி கொடுத்துவிட்டிர்கள்
அருமை
நன்றி.. தோழர்கள் ரிஷான், ஹாரிஸ் மற்றும் தமிழ்.. வலி மிகுந்த ஈழ நிகழ்வுகட்கு பின்னர் இப்போது தான் வலைப்பூவிற்கு வர நேர்ந்தது
Post a Comment