skip to main
|
skip to sidebar
Sunday, June 13, 2010
'மெக்காலே' மொழி
பூச்சாண்டி என்றால் என்னவென்றே
தெரிவதில்லை...'மெக்காலே' குழந்தைகளுக்கு
காட்சில்லாவையும் டைனோசரையும்
துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது
சோறு ஊட்ட
-ஜெ.நம்பிராஜன்
Sunday, June 6, 2010
பிள்ளைத்தமிழ்
படிக்கும் புத்தகத்தை
பறித்துக்கொண்டு ஓடுகிறாய்
புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்
படிக்கிறேன்...நான்
மாறாத மழலைப்பாடல்களை
மறந்து மறந்து பாடுகிறாய்
மறக்காமல் மீண்டு வருகிறது
எனது பால்யம்
-ஜெ.நம்பிராஜன்
Sunday, February 8, 2009
இழவு நாடு
எல்லா வீடுகளையும்
போன்றுவிடிவதில்லை
இழவு வீட்டின் இரவு
தூங்கா விழிகளுடன்
இழப்பின் வலியுடன் கூடிய
விடியாத இரவு அது
பிரிந்த நண்பர்களையும்
பேசாத சொந்தங்களையும்
அழைத்து வந்து விடுகிறது
மிக எளிதாய்...ஒரு மரணம்
எல்லோரும் சேர்ந்து
வழியனுப்புவர் கண்ணீருடன்
இறந்தவரை
இவையெல்லாம் வழக்கமான மரியாதை
மரிப்பவருக்கு...
ஆனால்
வழியனுப்ப எவருமில்லை
அழும் உறவுகள் எல்லாம்
அகதிகளாய் எங்கோ
பதுங்கு குழிகளுக்குள்
பதுங்கியிருக்கிறது
ஒரு தேசம்
பாஸ்பரஸ் குண்டுகளுக்கு
அஞ்சி
நித்தம் நூறு சடலங்கள்
மொத்தமாய்...கொத்துக் கொத்தாய்
சாவின் குறைந்தபட்ச
மரியாதையும் அற்று
மனிதம் மறந்த மரங்களாய்
ரத்தத்தின் மிச்சங்கள்
வேடிக்கை பார்க்கும்
அண்டை நாட்டில் அமைதியாய்
-ஜெ.நம்பிராஜன்
Saturday, September 20, 2008
முத்தத்தின் நிறைகுடம் - துளி 2
உன் ஒவ்வொரு முத்தமும்
விருட்சத்தின் விதை
என்னுள் விழுந்து வளர்ந்து
ஆயிரம் முத்தங்களாய்ப் பூக்கிறது
உன் உதடுகளுக்கு மத்தியில்
இறுக்கப்பட்டிருக்கிறது
என் உயிர் மூச்சு
உன் முத்தத்தால்
எனக்கு உயிர் கொடு
காற்று வெளியில்
எனக்கான முத்தங்கள் மிதக்கின்றன
உன் இதழ்களில் உயிர் பெற்று
என் இதழ்களில் இடம் பெற
என் ஒவ்வொரு கவிதையும்
உன் முத்தத்தில் தொடங்கி
முத்தத்திலேயே முடிகிறது
இந்த பூமியின்
முதல் முத்தம்
யார் கொடுத்தது
ஆதாமா...ஏவாளா?
-ஜெ.நம்பிராஜன்
Sunday, August 17, 2008
ஊர் கூடி...
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உறுப்புக்கள் சிதறிக் கிடக்க
கேட்பார் எவருமின்றி
கடற்கரையோரம்
அனாதைப் பிணமாய்
பிள்ளையார்...
விநாயகர் சதுர்த்தி
கொண்டாட்டங்களுக்குப் பிறகு
-ஜெ.நம்பிராஜன்
வாய்ப்பு
தயாராகி விட்டார்கள்
சிறுவர்கள் பிச்சையெடுப்பதற்கும்
இளைஞர்கள் வசூல் வேட்டைக்கும்
அரசியல்வாதிகள் சர்ச்சைகளுக்கும்...
விநாயகர் சதுர்த்தி நெருங்குகிறது
-ஜெ.நம்பிராஜன்
Sunday, July 13, 2008
நெல்லை எக்ஸ்பிரஸ்
ஆற்றுக்குளியலுடன் ஆசையாய்
அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து
தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
ஊர்வாசத்தின் மிச்சமாய்
பயணப்பட்டன சில பூச்செடிகள்
இரயிலில் என்னுடன்
எல்லாவற்றையும் பிரிக்கையில்
இலவச இணைப்பாக வெளிப்பட்டது
செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி
இரயில் பூச்சி ஒன்று
பார்த்தறியாத பக்கத்து வீட்டு
குழந்தைகளிடம் காட்ட வேண்டும்
அதுவரைக்குமாவது உயிரோடிருக்க வேண்டும்
அந்த பூச்சி
-ஜெ.நம்பிராஜன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
வருகைப்பதிவேடு
என்னைப் பற்றி
ஜெ.நம்பிராஜன்
சொந்த ஊர் திருநெல்வேலி. வேலை மலையாளக் கரையோரம். 'முத்தத்தின் நிறைகுடம்' எனது முதல் கவிதைத் தொகுப்பு.
View my complete profile
கவிதைகள்
▼
10
(3)
▼
Aug
(1)
தன்னிலை உணர்தல்
►
Jun
(2)
►
09
(1)
►
Feb
(1)
►
08
(19)
►
Sep
(1)
►
Aug
(2)
►
Jul
(2)
►
Jun
(2)
►
May
(1)
►
Apr
(3)
►
Mar
(1)
►
Feb
(4)
►
Jan
(3)
►
07
(7)
►
Dec
(2)
►
Nov
(5)
முகவரி
Nambirajan Jayabalan
Create Your Badge
ரயில் பயணங்களில்
கவிப்பேரரசு வைரமுத்து தேர்ந்தெடுத்து குங்குமம் இதழில் வெளியான கவிதை