- படிக்கும் புத்தகத்தை பறித்துக்கொண்டு ஓடுகிறாய் புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப் படிக்கிறேன்...நான்
Sunday, June 6, 2010
பிள்ளைத்தமிழ்
Sunday, February 8, 2009
இழவு நாடு
-
எல்லா வீடுகளையும்போன்றுவிடிவதில்லைஇழவு வீட்டின் இரவு
-
தூங்கா விழிகளுடன் இழப்பின் வலியுடன் கூடிய விடியாத இரவு அது
-
பிரிந்த நண்பர்களையும் பேசாத சொந்தங்களையும் அழைத்து வந்து விடுகிறது மிக எளிதாய்...ஒரு மரணம்
-
எல்லோரும் சேர்ந்து வழியனுப்புவர் கண்ணீருடன் இறந்தவரை
-
இவையெல்லாம் வழக்கமான மரியாதை மரிப்பவருக்கு... ஆனால்
-
வழியனுப்ப எவருமில்லை அழும் உறவுகள் எல்லாம் அகதிகளாய் எங்கோ
-
பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருக்கிறது ஒரு தேசம் பாஸ்பரஸ் குண்டுகளுக்கு அஞ்சி
-
நித்தம் நூறு சடலங்கள் மொத்தமாய்...கொத்துக் கொத்தாய் சாவின் குறைந்தபட்ச மரியாதையும் அற்று
-
மனிதம் மறந்த மரங்களாய் ரத்தத்தின் மிச்சங்கள் வேடிக்கை பார்க்கும் அண்டை நாட்டில் அமைதியாய் -ஜெ.நம்பிராஜன்
Saturday, September 20, 2008
முத்தத்தின் நிறைகுடம் - துளி 2
- உன் ஒவ்வொரு முத்தமும் விருட்சத்தின் விதை என்னுள் விழுந்து வளர்ந்து ஆயிரம் முத்தங்களாய்ப் பூக்கிறது
- உன் உதடுகளுக்கு மத்தியில் இறுக்கப்பட்டிருக்கிறது என் உயிர் மூச்சு உன் முத்தத்தால் எனக்கு உயிர் கொடு
- காற்று வெளியில் எனக்கான முத்தங்கள் மிதக்கின்றன உன் இதழ்களில் உயிர் பெற்று என் இதழ்களில் இடம் பெற
- என் ஒவ்வொரு கவிதையும் உன் முத்தத்தில் தொடங்கி முத்தத்திலேயே முடிகிறது
- இந்த பூமியின் முதல் முத்தம் யார் கொடுத்தது ஆதாமா...ஏவாளா? -ஜெ.நம்பிராஜன்
Sunday, August 17, 2008
ஊர் கூடி...
வாய்ப்பு
Sunday, July 13, 2008
நெல்லை எக்ஸ்பிரஸ்
- ஆற்றுக்குளியலுடன் ஆசையாய் அனுபவித்தாயிற்று பார்த்துப்பார்த்து தொழில்நகரத்தில் கிடைக்காதவற்றை
- ஊர்வாசத்தின் மிச்சமாய் பயணப்பட்டன சில பூச்செடிகள் இரயிலில் என்னுடன்
- எல்லாவற்றையும் பிரிக்கையில் இலவச இணைப்பாக வெளிப்பட்டது செடிகளுக்கு நடுவே ஊர்ந்தபடி இரயில் பூச்சி ஒன்று
- பார்த்தறியாத பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் காட்ட வேண்டும் அதுவரைக்குமாவது உயிரோடிருக்க வேண்டும் அந்த பூச்சி -ஜெ.நம்பிராஜன்
Saturday, July 12, 2008
முத்தத்தின் நிறைகுடம் - துளி 1
எனது முதல் கவிதைத்தொகுப்பு 'முத்தத்தின் நிறைகுடம்' நூலிலிருந்து கவிதைகள் தொடராக பாவெளியில் வெளிவரும். முதல் பகுதி இங்கே...
- உன் மேல் உதடு சூரியன்... கீழ் உதடு சந்திரன் ஒரே முத்தத்தில் உருக வைக்கும் வெயிலையும் உறைய வைக்கும் பனியையும் என் மேல் செலுத்துகிறாய்.
- நீ விவசாயி நான் விளைநிலம் என்னுள் மோகத்தை விதைத்து முத்தத்தை அறுவடை செய்கிறாய்.
- உன் ஒவ்வொரு முத்தமும் ஓர் முள் அதை... மறு முத்தத்தால் தான் எடுக்க வேண்டும்.
- உன் இதழ் தேனடை அதில் தேனெடுக்கும் போது மட்டுமே தேனீக்கள் கொட்டுவதில்லை.
- எத்தனை முறை குடித்தாலும் தீராத மதுப்புட்டி உன் இதழ் எவ்வளவு குடித்தாலும் ஆசை அடங்காத பெருங்குடிகாரன் நான்.
முத்தத்தின் நிறைகுடம்
ஜெ.நம்பிராஜன்
வெளியீடு: ஜெயஸ்ரீ பதிப்பகம்
Subscribe to:
Posts (Atom)



